அரசாங்கம் பாதீட்டில் யாரையும் கைவிடவில்லை எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவினர் தொடர்பிலும் கருத்திற் கொண்டே பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்,
“புள்ளிவிவரங்களுக்கு அப்பால் சென்று பாதீட்டின் பின்னணியில் உள்ள சிந்தனையைப் படிக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். நமது எதிர்காலப் பாதைக்கு அடிப்படை என்ன? பாதீடு அந்த உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
ரணிலின் கொள்கைகளின் நீட்டிப்பை நாங்கள் முன்வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அந்த வாதத்தை உருவாக்கும் எதிர்க்கட்சி அவர்களின் சொந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ளவே இல்லை” என்று பிரதமர் கூறினார்.








