இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறிய இந்திய பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிதாக தெரிவித்தார்.

மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலகட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் என இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது.

அதேநேரம் பொருளாதரா நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது.

ஒரு உண்மையான அயல் நாடாக இலங்கையிடன் நின்றது பெருமையாகவுள்ளது.

ஜனாதிபதி திசாநாயக்கவால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷண’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.

அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது.

இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என இந்திய பிரதமர் மோடி இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here