நேற்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிக்காந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here