சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது.

கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது.

வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக மாத்திரம் அவர் 4.1 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயைக் கேட்டுள்ளதாகவும் 2 இலட்சம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மேலதிக கையூட்டலை பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்காக “மெட் ஹவுஸ்” என்ற கட்டிடத்தின் வாடகைக் காலத்தை நீட்டிப்பதற்காக 3 குத்தகை ஒப்பந்தங்களை பதிவு செய்ய, அவர் ரூ. 4,134,887-ஐ “கட்டணமாக” கோரினார் என்றும் மெட் ஹவுஸ் (பிவிடி) லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 500,000-ரூபாய்க்கான காசோலையைக் கேட்டுப் பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த காசோலை, நிறுவனத்தின் அரச வங்கிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்டமை தெரிய வநதுள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here