தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே. அதனால் தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தனர் என ஐக்கிய மக்கள் சக்தியின்  யாழ் தேர்தல் தொகுதியின் பிரதான வேட்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளைப்பகுதியில் இன்று ( 22.10 ) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், மிக முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களில் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒரளவுக்காவது அக்கறையுள்ள தலைவராக சஜித் பிரேமதாஸ காணப்படுகின்றார்.இதனால் தான் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.அந்த கட்சியுடன் சேர்ந்தே சமத்துவக்கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்கின்றது. சமத்துவக்கட்சி மாத்திரம் அல்ல மலையக  தமிழ் ,முஸ்லிம் கட்சிகள் இணைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here