தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு, மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here