தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று(26.09.2024) நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து எக்ஸ் பதிவொன்றை இட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய – இலங்கை சம்மந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.








