எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமும் வேட்புமனுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வேட்புமனுவிற்கும் 2000 ரூபாய் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 18 வேட்புமனுக்கள் வரை சமர்ப்பிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்தத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here