நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06.08) திங்கட்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, அவர் உரையாற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இரு சமூகங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வெளிப்படையான அரசியல் உந்துதல்களால் மேலும் பெரிதாக்கப்படுகின்றன என சாணக்கியன் குற்றம்சாட்டினார்.

இத்தகைய பிரச்சினைகள் உள்ளடக்கிய சமூகங்களுக்குள்ளே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here