தாய்லாந்து மக்களுக்கு இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வந்த ராணி சிரிகிட் அக்டோபர் நேற்றைய தினம் (24) பாங்காக்கில் அமைந்துள்ள மன்னர் சுலாலாங்கோர்ன் நினைவு மருத்துவமனையில் இரவு 9.21 மணிக்கு காலமானார்.
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் ராணி சிரிகிட் தனது 93 ஆவது வயதில் காலமானார்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட அவர் 2019ஆம் ஆண்டு முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த மாதம் ரத்தப்போக்கு (blood infection) நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.








