மொனராகலை – கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








