திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த படம் கமல்ஹாசன் கௌதமி ஆகியோரின் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது படத்தின் 3 வது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார் .
இந்த நிலையில் படத்தில் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தின் முதல் 2 பாகங்களும் வழக்கமான கதைகளை விடவும் மிக வித்யாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








