கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது, அப்பகுதியில் பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கு தடையாக இருப்பதாகக் கூறப்பட்ட தமிழரசுக் கட்சியின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனச் சாணக்கியன் தெரிவிப்பதையும், பௌத்த சின்னங்களை வைக்கத் தடையிட முயற்சிப்பதையும் அவர் குற்றம் சாட்டினார்.|

“இவரைப் போல பலரைச் சந்தித்துள்ளோம். எதற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது,” என ஞானசார தேரர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பதிலளித்த சாணக்கியன், கடும் கண்டனத்துடன் கூறியதாவது:

“எமது தமிழர் தாயகத்தினை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அடாவடித் தனங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளை இனி அமைதியாகப் பார்க்க மாட்டோம்.”

மேலும், “தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இவ்வாறான இனத்துவேஷ நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது” எனவும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here