இலங்கையின் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் திருமணங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாடல்களை பாடுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பரவும் கூற்றுக்களை அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.

பொது நிகழ்வு ஒன்றில் பேசிய ஹேரத், பிற படைப்பாளிகளுக்கு சொந்தமான பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்காக பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாளிகளுக்கு பணம் செலுத்துவது தொடர்பான சமீபத்திய விவாதங்களை பேஸ்புக்கில் பரவும் கூற்றுக்கள் தவறாக சித்தரித்துள்ளதாக கூறினார்.

டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, மற்ற படைப்பாளிகளுக்கு சொந்தமான பாடல்கள் நிதி ஆதாயத்திற்காக நிகழ்த்தப்படும் வணிக ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வுகளுடன் இந்த பிரச்சினை குறிப்பாக தொடர்புடையது என்று அவர் விளக்கினார்.

இத்தகைய லாபம் ஈட்டும் நிகழ்வுகளில் தங்கள் படைப்புகள் பயன்படுத்தப்படும்போது அசல் படைப்பாளிகள் ஒரு பங்கை பெற வேண்டும் என இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) கூறி வருவதாக விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு பரவியதை தொடர்ந்து இந்த விடயத்தை தெளிவுபடுத்த தாம் நேரடியாக குறித்த சங்கத்தை தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது திருமணங்கள் அல்லது ஹோட்டல்களில் பாடல்களை பாடுவதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கட்டணம் இன்றி திருமணங்களில் பாடல்களை பாட முடியாது என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது,” என தெளிவுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

வணிக ஆதாயத்திற்காக டிக்கெட்டுகளை விற்பதன் மூலம் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும்போது, அந்த நிகழ்வில் நிகழ்த்தப்படும் பாடல்களின் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை பயன்படுத்துவதற்கு பொருத்தமான இழப்பீட்டை பெற வேண்டும் என்பதே சங்கத்தின் நிலைப்பாடு என்று அவர் விளக்கினார்.

அறிவுசார் சொத்து பாதுகாப்பின் கீழ் தங்கள் படைப்புகளுக்கு பொருத்தமான அங்கீகாரம் மற்றும் நிதி மதிப்பை பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் நீண்ட காலமாக நாடி வருவதாக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here