மித்தெனிய, கல்பொத்தயாய – ஜுலம்பிட்டிய வீதியில் 6வது மைல் தூணுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதற்கமைய 42 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளனர். தம்பதியினர் முதலில் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here