இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி  முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு 1,019,642  சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும்,  மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள  தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா,சீனா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here