Tuesday, July 28, 2026
No menu items!

மித்தெனிய

கந்தானையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு!

மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களுக்கு ஒத்த பொருட்கள் கந்தானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இரசாயனங்கள், செப்டம்பர் 6ஆம் திகதி மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன்...

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி !

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

மித்தெனிய பகுதியில் தந்தை ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் நோக்கித் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் 23 வயதான...

மித்தெனிய கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

மித்தெனிய கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனியாவின் கல்பொத்தயாய பகுதியில் தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் சுட்டுக்...

ரயில் மோதி நபரொருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை , சாம்பல் நிற...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்…!

மித்தெனிய, கல்பொத்தயாய - ஜுலம்பிட்டிய வீதியில் 6வது மைல் தூணுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இதற்கமைய 42 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளனர். தம்பதியினர் முதலில் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சூட்டிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட...

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img