சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் காரொன்றைச் சோதனையிடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமை துப்பாக்கியை காரில் உள்ள நபர் பறிக்க முற்பட்ட போது, ​​துப்பாக்கி வெடித்ததில் அந்த அதிகாரியின் காலிலும், பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டன.

பின்னர் இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காரில் பயணித்த பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here