Turkey-backed Syrian rebel fighters drive on top of a truck to cross into Syria, near the border town of Akcakale in Sanliurfa province, Turkey, October 17, 2019. REUTERS/Murad Sezer - RC13B58304C0

கடந்த நான்கு தசாப்த காலமாக துருக்கியுடன் மோதலில் ஈடுபட்டிருந்த குர்திஷ் போராளிக்குழுவினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

தமது ஆயுத குழுவினரை கலைப்பதன் மூலம் நீண்ட கால மோதலை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனை துருக்கி தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுதந்திர குர்திஷ் தனிநாடொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் கடந்த 1984ஆம் ஆண்டில் போராளிகள் பல்வேறு தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 40 வருடங்களாக இடம்பெற்று வந்த மோதல்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இது தவிர, பொருளாதார சுமை ஏற்பட்டதுடன் சமூகங்களுக்கு இடையே பாரிய பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், குர்திஷ் விவகாரத்தை கைவிடாமல் அதனை ஜனநாயக ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன், ஆயுதக்குழுவை கலைப்பதாக குர்திஷ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் 12ஆவது காங்கிரஸ் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here