கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (05.12.2024)மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கொலை என சந்தேகித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அவருடைய 14வயது மகனை கைது செய்துள்ளனர்.

இன்று (06.12.2024) காலை சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி  விசாரணைகளை மேற்கொண்டதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் சம்பவ இடத்திற்கு வந்து  சடலத்தை பார்வையிட்டார்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here