தெலுங்கு மொழியில் ரீல்ஸ் செய்து அசத்தும் இலங்கைபுகழ் ஜனனியின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர்.
ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.

தெலுங்கு மொழியில் வெளியான காணொளி
அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன், தற்போது விஜய் சேதுபதி, மிஸ்கின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜனனி அடுத்து லோகேஷ் – ஸ்ருதி ஹாசன் கூட்டணியில் உருவாகும் உசுரே படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் கமிட்டாகிய பின்னர் படக்குழுவினரை சந்தித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தெலுங்கு மொழி பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டது இலங்கை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. காணொளியை பார்த்த இணையவாசிகள், “தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிற்கும் சென்று விட்டீர்களா?” என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.









