சந்தையில் தேங்காயின் விலை தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது.
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற ரீதியில் அடுத்த ஆறு மாதங்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என நம்புவதாக அதன் தலைவர் சமன் தேவகே சுட்டிக்காட்டியுள்ளார்.








