முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தெரிவித்ததாக ( 26.10.2024) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று  26.10.2024நடைபெற்றது.

இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட தற்பொழுது நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அதிகமான வாக்குகளை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அனைவரும் ஓர் மாற்றத்தையே விரும்புகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே அதிகளவான மதுபான சாலைகள் அனுமதிப்பத்திரம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தெரிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கான அதிகாரமும் மக்களிடம் உள்ளதாகவும் மதுபான சாலைகளை மூட வேண்டிய மக்களுக்கே உள்ளது தமது பகுதி கிராம சேவையாளர்  அவர்களுக்கு  தமது எதிர்ப்பினைதெரிவித்து  கடிதம் மூலமாகவும் அல்லது மாவட்டச் அரசு அதிபர் ஊடாக உங்கள் எதிர்ப்பு கடிதத்தினை  வழங்குவதன் மூலமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கான அதிகாரமும் சட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தெரிவிக்கையில் முன்னைய அமைச்சர்களாயினும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாயினும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டால் வழங்கப்படுவதும் அவர்களுடனான புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் வைத்து அவர்களை தமது கட்சியில்இணைத்துக் கொள்ளவோ  ஏற்றுக்கொள்வதாக கருதப்பட மாட்டார்கள்.

தமது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனங்களுக்கு அமைவாக 25 அமைச்சர்கள் மாத்திரமே  தமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் மாத்திரமே வைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக விமல் ரத்னாயக்க அவர்கள் நேற்றைய தினம்  வட்டக்கச்சியில் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்றைய தினம் வட்டக்கச்சி பகுதியில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்னாயக்கா உள்ளிட் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன் மற்றும் உதயகுமாரன் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்பு இருந்த அரசியல் வாதிகள் மக்களை இனரீதியாக பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் செய்தனர். எமது மக்கள் இனரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ முன்னேற்றம் அடைய வில்லை .தேசிய மக்கள் சக்தியில் இனவாதமோ மதவாதமோ இல்லாத கட்சி, ஜனாதிபதிக்கு 52வீதமே ஆட்சி செய்ய முடியும் மீதி பாராளுமன்ற ஆசனம் கிடைக்கும்போது நூறு வீதமாக ஆட்சி செய்ய முடியும்

இதுவரை காலமும் பலர் மாறி மாறி ஆட்சி செய்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை காலமும் ஒரு வாகனமே ஐந்து வருடங்களுக்கு மாற்றி மாற்றி ஓடியது.

எதிர் தரப்பு வாதிகள் சொல்லியிருந்தார்கள் அனுர ஜனாதிபதியாகினால் எரிபொருள் தட்டுப்பாடு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு கிடைக்காது என்று, டொலர் அதிகரிக்கும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அனுரவின் வெற்றியை தடுக்க முயன்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு வாக்களிக்காத மக்கள் இம்முறை திசைகாட்டிக்கு வாக்களிக்க உள்ளனர்.

யாழ் தேர்தல் தொகுதியில் வாக்கு வீதம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதியின் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கடற்றொழிலை கட்டியெழுப்புவோம்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலை இன்று இயங்காமல் உள்ளது. பலருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திய இடம் வடமாகாணத்தில் பாரிய பிரச்சனையாக போதைவஸ்து உள்ளது. இவற்றையும் இல்லாது செய்ய வேண்டும்.

ஜனாதியும்  பாராளுமன்றமும்  புகையிரதம்போல இருக்க வேண்டும். 2015ம் ஆண்டு மைத்திரி ரணில் ஆட்சில் ரணில் வேறு கட்சி மைத்திரி வேறு கட்சி  சண்டை மாத்திரமே நடந்தது.  நாட்டில் ஒன்றும் இயங்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல்  மூலம் 76வருடங்களாக இலங்கை மக்கள் தேடிய  இரத்தினம் கிடைத்துள்ளது உள்ளது.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சஜீத்பிரேமதாஸ வடக்கிற்கு  சுமந்திரன், கிழக்கிற்கு ஹக்கீம்,மலையகத்திற்கு  திகாம்பரம் என்ற முகத்துடனே சென்றார். அதே போல் ரணிலும்

வடக்கு டக்ளஸ் கிழக்கு அதாவுல்லா மலையகம் தொண்டமான் என்ற முகத்துடன் சென்றார்.

அனுர அனுர என்ற ஒரே முகத்துடனே நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றார்.

இனவாதத்தையோ மதவாதத்தையோ தேர்தல் காலத்தில் பேசவில்லை இதனாலே எல்லா இடங்களிலும் அதிக வாக்கு கிடைத்தது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் தொகுதிகள் அடங்களாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வருவதற்குரிய வாக்குகள் கிடைத்துள்ளன.

சிங்கள தமிழ்  முஸ்லீம் மக்கள்  1948 ம் ஆண்டிலிருந்து நாட்டிற்கு சிறந்த ஒரு மாணிக்கத்தை பெற முனைந்தனர் .அது கிடைக்காமையாலேயே  சிங்கள முஸ்லீம்  என இனரீதிதயான கட்சிகளை அமைத்தனர். பழைய ஆட்களின் முகங்களை நீக்க வேண்டும்.

நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு சென்ற ஒருவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் இடம் வழங்ப்படவில்லை கடந்த கால ஆட்சியில் இருந்த பலர் வேட்பாளர்களாக இடம் கேட்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25அமைச்சர்கள் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மாத்திரமே ஏனையோருக்கு இடம் இல்லை.

சில பேர் சொல்கின்றனர்.நான் தான் மீண்டும்  மீன்பிடி அமைச்சர் நான்தான் நீதியமைச்சர் நான் தான்  வடக்கு அமைச்சர் என்று அப்படியானவர்களை இணைத்து கொள்ள மாட்டோம் 25 அமைச்சர்களும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களே யாரும்  போட்டோகள் எடுப்பார்கள்  பேசுவார்கள். சலூன் கதவு போன்றது.இல்லை கட்சி  பார் அனுமதிப்பத்திரம் கொடுக்கிற கட்சி  இல்லை. ரணில் விக்கிரமசிங்க வந்தவுடன் தமிழ் Mpகளுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

யுத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கர்கள்  உள்ள இந்த மாவட்டத்தில் மதுபாண சாலைகள் இதற்கு எதிராக எங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் உங்களுக்கு உரிமை இருக்கு

பாராளுமன்ற தேர்தலின் பின்பு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம் சிங்கள தமிழ் முஸ்லீம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

யுத்த காலத்திலும் பின்பும் பல சம்பவங்கள் இடம்பெற்றன.  துரிதமாக விசாரணை செய்வோம் தராகி சிவராம் லலித் குகன், அப்பாவி மாணவர்கள் திருகோணமலையில் படுகொலை உள்ளிட்ட பல விடயங்கள் திடீரென பொருளாதார யுத்தத்தை வெல்ல முடியாது படிப்படியாக விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுப்போம் விவசாயத்தை ஊக்குவிப்போம்.

பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலை போன்றவற்றை மீள உருவாக்குவோம்.சாதாரண கிராமத்திலிருந்து வந்த ஒருவரே ஜனாதியாகியுள்ளார். கிராமிய மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே எமது இலக்கு என தெரிவித்தார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here