அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் அக்டோபர் 17ம் தேதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த அதிகாரம் அரசியல் சாசனத்தால் தேர்தல் ஆணையத்திற்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here