வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1500பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித்தேர்தல் ஏற்ப்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.  அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள்,பொலிசார்,தேர்தல் கண்காணிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் மத்தியநிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர்கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here