கேரள மாநிலம், மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த வாலிபருடன் தொடர்பிலிருந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.








