எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கப்பட்ட நிலையை தொடர்ந்து இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதுகாப்புப் படைகளின் பிரதானி, பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பரிந்துரைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தேர்தல் ஆணைக்குழுவுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்றும் குறித்த பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








