ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்றைய தினம் (06.08) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவா் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.








