முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்ட மாணவர்களுக்கான ஆறுமாத கால தையல் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வளங்கும் நிகழ்வும் தையல் கண்காட்சியும் நேற்று 27.04.2024 சிறப்புற நடைபெற்றுள்ளது.
ஏற்பாட்டாளர் லிகிர்த்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிவசுவாமி சர்மினி சிறப்பு விருந்தினராக வித்தியாதீபம் சுவீஸ் இன் ஆலோசகர் ம.ஸ்ரீகரன் உள்ளிட் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இந்த நிகழ்வில் மூன்றாம் கட்ட தையல் பயிற்சியினை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மாணவர்களுக்கான கணிணி பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டு பயிற்சி வழங்கிவைக்கிவைக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு பாடசலை மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் பாடசாலைக்கான மடிக்கணணி என்பனவும் மற்றும் தண்ணீரூற்று இந்துதமிழ்கலைவன் பாடசாலைக்கான மடிக்கணணி மற்றும் புத்தகங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஓவியர் யாக்கோப்பு மிக்கோட்பிள்ளை அவர்ளின் நினைவாக மாணவர்களிடையே ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் 70 அகவைக்க மேற்பட்ட 15 முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்திரனர் உரைநிகழ்த்திய கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் சிவசுவாமி சர்மினி அவர்கள் மொழி அறிவு மற்றும் கணணி அறிவில் எங்கள் தமிழ்மக்கள் குறைவாக காணப்படுகின்றார்கள் இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது இங்கிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள் சந்தைகளில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது இலகுவான காரியம்அல்ல வடக்கில் இருந்து கொழும்பில் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட மொழிப்பிரச்சினை காணப்படுகின்றது.
முல்லைத்தீவில் மட்டுப்படுத்தப்பட்ட தொழில் வாய்ப்புக்ககள்தான் காணப்படுகின்றது பாரிய தொழிற்சாலைகள் கூட இல்லாத நிலை பாரிய முதலீட்டாளர்கள் பாரிய அளவில் முதலீடுகள் கூட செய்யவில்லை சிறியளவிலான தொழில் முயற்சிகள் தான் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
யுவதிகள் தான் பயிற்சியினை நாடுகின்றார்கள் ஆனால் இளைஞர்கள் அக்கறையின்னை ஆனால் கையேந்துவதற்காக பழக்கப்பட்டுள்ளோம் அரங்காத்திடம் கொடுப்பதற்கு இல்லை இளைஞர்கள் இந்த நிலை மாற்றவேண்டும், இலங்கையில் தொழில் படையில் உள்ள இளைஞர்கள் வெளியில் நிக்கின்றார்கள் இதனால் இளைஞர்கள் மத்தியில் பல்வேறு சமூக பிரச்சினைகள் உருவாகி வருகின்றது இவ்வாறான பயிற்சி நெறிகள் பெண்களை நோக்கி செல்கின்றது.
அதிகளவான போதைப்பொருள் பாவனைக்கு ஆண்கள் தான் காரணம் பொது அமைப்புக்கள் ஆண்களையும் இலக்காக கொண்டு பயிற்சியினை மேற்கொள்ளுங்கள் போதைப்பொருள் பாவனையில் ஈசியாக பணத்தினை பெற்றுக்கொள்ளம் இளைஞர்களாக காணப்படுகின்றார்கள் இந்த மனநிலை இளம் ஆண்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.







