இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகின்றது.
காசாவை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், காசாவிலுள்ள ஷெஜையா எனுமிடத்தில் பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையொன்றின் மீது நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.








