பல்வேறு நிறங்கள் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டு இந்த ஆண்டு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டுகள் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் வழக்கமான நபர்களை அடையாளம் காணும் வகையில் மூன்று வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும் என அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








