வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் தொடரூந்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நேற்றயதினம் இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தொடரூந்து செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வீதியின் குறுக்காக நின்ற யானைகளுடன் மோதியது.
விபத்தில் பெண்யானை ஒன்று உடல் சிதறி பலியாகியதுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பலியாகியது.
குறித்த சம்பவத்தையடுத்து விபத்திற்குள்ளான தொடரூந்து செட்டிகுளம் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யானையின் சடலம் அகற்றப்பட்ட பின்னர் அது மன்னார் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.









