நாட்டில் தச்சுத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்க தமது அரசாங்கம் செயற்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்று ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







