பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசியின்  ஊடாக வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 8.30 இற்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய்கள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here