யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு–குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் படகு உரிமையாளர்கள் சங்கமே இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5 மணிக்கு நடைபெறும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற வழமையான சேவை நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here