2021 இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பயணத்தை தொடங்கிய குமார் சங்ககாரா வழிநடத்தலில், சாஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இருப்பினும், 2024 உலகக்கோப்பை வெற்றிக்காக இந்திய அணியை வழிநடத்திய ராகுல் திராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், சாஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகள் தொடர்ந்ததால் ராகுல் திராவிட் சமீபத்தில் தனது பயிற்சியாளர் பதவியை விலகினார்.

இதன் பின்னணியில், 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here