சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து, டீசல் பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.








