இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை 712,318 என சுட்டிக்காட்டிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்களில் 6,200 பேரைத் தவிர ஏனைய தபால் மூல வாக்குகள் அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here