கொரதொட்டை, நவகமுவ பகுதியில் ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற ஆண் ஒருவரின் கொலை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) மாலை இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் ஆகியோர் பியகம பொலிஸ் பிரிவின் டெல்கொட மற்றும் நவகமுவ பொலிஸ் பிரிவின் வண்டுரம்முல்ல பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 21 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் ரணல மற்றும் பல்லம பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here