நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சில நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, 7 அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று இவ்வாறு வாக்குமூலத்தை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தைக் குறிப்பிட்டு தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here