பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதனை முகாமைத்துவம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல்  26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 26 ஆம் திகதி  காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை திறந்திருக்கும்.

அத்துடன், இவ்வருட இறுதி நாளான 31 ஆம் திகதி காலை 9.00 முதல்  2025 ஆம் ஆண்டின்  ஆரம்ப நாளான ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி காலை 9.00 முதல்  2 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here