நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பலமுறை சபாநாயகர் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்திருந்த போதும் இதுவரை முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு என்பது சபாநாயகரின் கைகளிலேயே தங்கியுள்ளதாகவும் இளையதம்பி சிறிநாத் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பை வழங்குவதை விட அதற்கு முன்னர் பாதுகாப்பு வழங்குவது சிறந்தது என சுட்டிக்காட்டினார்.








