Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

1818 போதைப்பொருள் தகவல் தொலைபேசி இலக்கத்திற்கு 4 நாட்களில் 800 அழைப்புகள் – 5,300 பேர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய போதே...

தெற்கில் உள்ள அரசியல்வாதிகளுக்கு போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்!

தெற்கில் செயல்படும் சில அரசியல்வாதிகள், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொதுமக்களிடமிருந்தும் புலனாய்வு பிரிவுகளிடமிருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடந்த அரசியல் சூழல் காரணமாக இந்தவகையான குற்றச்செயல்கள் பெருகியதாகவும், தற்போதைய அரசு அதை...

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்கள் அரச பயன்பாட்டிற்காக!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும்...

“வாயை மூடிக் கொண்டு செவிமடுங்கள்” – ரோஹினி கவிரத்ன; நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பினார். தலதா மாளிகை மீதான ஒரு தாக்குதல் மற்றும் விடுதலை புலிகள்...

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுமா?- அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கம்!

பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று...

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு!

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பிரதமர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்களை பிள்ளையான் அம்பலமாக்கினார் – ஆனந்த விஜேபால!

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 10ஆம் திகதி வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கபோவதில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி; அமைச்சர் ஆனந்த விஜேபால!

பொலிஸ் சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாரின்  துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தொடர்பாக நீதிமன்றத்தில்...

கடமையிலிருந்து தப்பிச் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது!

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை இல்லை; MP.சிறிநாத்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். இது தொடர்பில் பலமுறை சபாநாயகர் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்திருந்த போதும் இதுவரை முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு என்பது சபாநாயகரின்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img