நேற்றைய தினம் (அக்டோபர் 26) நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட விரிவான பொலிஸ் நடவடிக்கையில், பல்வேறு குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானக் குற்றங்களுடன் தொடர்புடைய 781 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கை, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, காவல்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 30,000 நபர்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இதில் 17 நபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களும் குற்றச்சம்பவத்தில் தொடர்புள்ள என்று சந்தேகிக்கப்படும் 485 சந்தேக நபர்களும் கூட கைது செய்யப்பட்டனர்.
மேலும், சட்ட அமுலாக்கக் குழுக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாதவர்களையும் கவனித்தனர் அந்த வகையில் 26 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய ஓட்டுநர்கள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய 25 வாகன ஓட்டுநர்கள் இதில் குற்றம்சாட்டப்பட்டனர்.
மேலும், 4,306 நபர்கள் வேகம், தலைக்கவசம் அணியாதது மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








