நாடு முழுவதும் நேற்று (18) நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது, 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள், நாட்டின் அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக மொத்தம் 28,705 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேர் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







