Tuesday, July 14, 2026
No menu items!

மதுபோதை

நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை: ஒரு நாளில் 736 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்று (18) நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது, 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், நாட்டின் அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக மொத்தம் 28,705 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50...

லிந்துலையில் முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – நால்வர் படுகாயம்!

லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர...

தபால் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகமான சம்பவம்!

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி  நேற்றைய தினம் (11-07-2025) பயணித்த இரவு தபால் புகையிரதமானது, கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியது.    இதில், புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கறுப்பையா ஐங்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். மதுபோதையில் தடுமாறி விழுந்த நிலையில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கும்...

சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை ;120 பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது. எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும்...

பாடசாலை மாணவர்களை மதுபோதையில் ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று (19) குருநாகல், கட்டுப்பொத்த காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பிற்பகல் கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்றை காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு  வருகை தருவதால்...

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சுவாசப் பரிசோதனைக் கருவிகள்...

ஒன்றுடன் ஒன்று மோதிய 17 வாகனங்கள் – 5 பேர் பலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர...

தனியார் பேருந்தின் சாரதி மீது தாக்குதல் – வெளியான பகீர் தகவல்..!

கிளிநொச்சி அக்கரயான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி ஆடை தொழிற்சாலையில் இருந்து நேற்று (12.02.2025) மாலை அக்கராயன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து மதுபோதையில் வந்தவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதே சமயம் கிளிநொச்சியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி அக்கரயான் பகுதிக்கு சென்ற...

குளத்தில் குதித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் (29.01.2025) ஆலயத்தின் தீர்த்தோற்சவ  நிகழ்வு  நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் முடிவெடுக்கவில்லை; அரசாங்கம்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
- Advertisement -spot_img