மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஆவார்.
பொலிஸார் தெரிவித்ததின்படி,
குறித்த பெண் அவரது கணவரால் குடும்பத் தகராறின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சடலம் தற்போது வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








