நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர கூறியுள்ளார்.
இவர் இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் குறைவதால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில், “தனிப்பட்ட வருமானத்தைப் பார்த்தாலும், அதிகரித்த விலை நிலைகள் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம்.
ஆனால் 2021 உடன் ஒப்பிடும்போது, வாழ்க்கைச் செலவு பொதுமக்கள் உணரக்கூடிய அளவில் இருப்பதைக் காண்கிறோம்.
அரச ஊழியர்களாக இருந்தாலும், தனியார் ஊழியர்களாக இருந்தாலும், அல்லது வணிகங்களின் வருமானமாக இருந்தாலும், அந்த வருமானத்தை அதிகரிக்க அதேபோன்று பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும்.
எனவே, பொருளாதார வல்லுநர்களாகிய நாம் பார்ப்பது சம்பளம் அதிகரிக்கும் போது, அவை உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.








