இளைஞர் மற்றும் யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம், மல்தெனிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 வயதுடைய தாயும் 18 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் போதைமாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here