நாட்டில் தற்போது 3,65,951 பேர் வேலையின்றி உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024 தொழிலாளர் படை அறிக்கையின்படி,

2024 முதல் காலாண்டில் 4.5% ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது.

2024 இரண்டாம் காலாண்டில் 4.7% இருந்ததும், 2025 இல் 3.8% ஆக குறைந்துள்ளது.

கல்வித் தகைமைகளின் அடிப்படையில் வேலையின்மை:

க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழே – 103,308 பேர்

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தோர் – 91,405 பேர்

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தோர் – 128,984 பேர்

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் – 42,254 பேர்

இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கும் கொள்கைப் பிரகடனத்தின்படி வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்துள்ளன; மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்குப் பிறகு ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here